டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலருந்து நாட்டை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கணக்கான திட்டங்களை அறிவித்தார். அந்த திட்டங்களை 5 கட்டங்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதில் மிக முக்கியமாக, லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்க மத்தியஅரசு முடிவு செய்தது.

இதுகுறித்து ட்விட்டரில் ராகுல்காந்தி நன்றி தெரிவித்து உள்ளார். அவர் தமது பதிவில் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
அதற்காக பிரமதர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்,காங்கிரஸின் தொலைநோக்குத் பார்வையான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை புரிந்துகொண்டார். அதை ஊக்கப்படுத்தவும் செய்கிறார் என்று கூறி உள்ளார். 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவி ஏற்றபின் பேசிய வீடியோவையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.