சகோதரி பிரியங்காவுடன் வயநாடு தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார்

திருவனந்தபுரம்:

வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்காவுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன்  இன்று காலைகோழிக்கோடு விமான நிலையம் வந்த ராகுலுக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா நகருக்கு சென்றவர், பின்னர் வாகனம் மூலம் பேரணியாக  கலெக்டர் அலுவலகம் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வயநாடு வந்த ராகுல்காந்திக்கு சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று உற்சாக குரலெழுப்பி வரவேற்பு அளித்தனர்.

வேட்புமனு தாக்கலின்போது, ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர். ராகுல்காந்தி பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் இருந்தது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

ராகுல் வயநாடு வந்ததையொட்டி, அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. செய்யப்பட்டு உள்ளது.

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: nomination, Priyanka Gandhi, RahulGandhi, Wyanad constituency
-=-