மோடிக்கு நாடக தின வாழ்த்துக்கள் சொன்ன ராகுல்

டில்லி

பிரதமர் மோடிக்கு உலக நாடக தின வாழ்த்துக்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறவேற்றாமல் உள்ளதாகவும், மக்களிடம் நடித்து வருவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அத்துடன் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றாததை மக்கள் கண்டுபிடிக்காமல் இருக்கவே இத்தகைய நாடகங்களை நிகழ்த்துவதாகவும் பல முறை கூறி உள்ளார்.

இன்று மிஷன் சக்தி என்னும் செயற்கைக் கோள் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இது நமது விண்வெளித்துறையின் சாதனை எனவும் அவர் தெரிவித்தார். இந்த சோதனை நமது நாட்டின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சி மட்டுமே எனவும் பிறநாடுகளுக்கு எதிரானது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “விண்வெளி ஆய்வுத் துறை யின் சாதனைக்கு பாராட்டுக்கள். நான் உங்கள் நடவடிக்கையால் பெருமை அடைந்துள்ளேன்.

நான் அத்துடன் பிரதமர் மோடிக்கு மகிழ்ச்சியான உலக நாடக தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிந்துள்ளார்.