Random image

வரிசையில் நின்று விமானத்தில் ஏறிய ராகுல்காந்தி….வைரலாகும் புகைப்படம்

டில்லி:

குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது தாய் சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல டில்லி வந்தார்.

பின்னர் டில்லியில் இருந்து அகமதாபாத் செல்ல இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் சென்றார். அங்கு இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக அவர் சக பயணிகளுடன் வரிசையில் காத்திருந்து சென்றார். இந்த புகைப்படத்தை இண்டிகோ நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இது சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் ராகுல்காந்தியை ஒப்பிட்டு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பின் போது ஏடிஎம் வாசலில் ராகுல்காந்தி வரிசையின் நின்று பணம் எடுத்தார். இந்த புகைப்படமும் அப்போது வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed