டில்லி

ன்று டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  மாபெரும் பேரணி ஒன்றை நடத்த உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் செய்து வருகிறார்.     நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.   எதிர்க்கட்சிகளை பாஜகவுக்கு எதிராக திரட்ட கடும் முயற்சி எடுத்து வருகிறார்.

இன்று டில்லியில் ஜன் ஆக்ரோஷ் என்னும் பெயரில் ஒரு மாபெரும் பேரணியும், பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தையும் ராகுல் காந்தி தலைமை ஏற்று நடத்தி வைக்கிறார்.    தங்கள் கூட்டணிக்கு மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவும்,  வரும் 2019 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.   இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்பட பல தலைவர்கள் பங்கு பெறுகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட், ”மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் அவர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.   பெண்கள் மற்றும் தலித்துக்களுக்கு எதிரான வன்முறை,  வங்கி மோசடிகள், பொருளாதார சீர்குலைவு ஆகியவை அதிகரித்துள்ளது.  இதனால் மக்கள் கடும் கோபமுற்றுள்ளனர்.   இதை வெளிப்படுத்த இந்த பேரணியும் கூட்டமும் நடைபெறுகிறது”  என தெரிவித்துள்ளார்.