டில்லி

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களை இன்று ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற தேவையான இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார்.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். அதற்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆயினும் ராகுல் காந்தி இதுவரை தனது ராஜினாமா முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை இன்று சந்திக்கிறார்.

இந்த சந்திப்பில் ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் மாநில முதல்வர் அஷோக் கேலாத், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பகெல், மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். எதைக் குறித்ஹ்டு இந்த சந்திப்பு நிகழ்கிறது என்பது அறிவிக்கப்படவில்லை.