கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் ராகுல் காந்தி

காத்மண்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேபாளத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்  பிரசாரத்துக்காக டில்லியில் இருந்து ஹூப்ளிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமானம் மூலம் சென்றார்.   அப்போது அவர் சென்ற விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாக இருந்தது.     விமானம் பயங்கர சத்தம் எழுப்பியபடி இடதுபக்கமாக சாய்ந்தபடி பறந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தானியங்கி மோடுக்கு சென்றதை அறிந்த விமானிகள் உடனடியாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்கள்.   இது குறித்த விசாரணைக் குழு அறிக்கையில் ராகுல் சென்ற விமானம் 20 நொடிகளில் விபத்தில் இருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு 3 நாட்கள் கழித்து ராகுல் காந்தி திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்லப் போவதாக தெரிவித்தார்.   தற்போது ராகுல் காந்தி 15 நாட்கள் யாத்திரை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.   கைலாஷ் மானசரோவர் இமயமலையில் அமைந்துள்ளது.   நேற்று முன் தினம் ராகுல் காந்தி இந்த யாத்திரைக்காக டில்லியில் இருந்து கிளம்பினார்.

நேர்று முன் தினம் நேபாளத் தலைநகர் காட்மண்டுவுக்கு ராகுல் காந்தி வந்துள்ளார்.   நேற்று அவர் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை தொடங்கி உள்ளார்.   பாதுகாப்பு காரணமாக அவருடைய  பயணப்பாதை குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.