தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பாதுகாப்புக்கு துணை நிற்பேன் : ராகுல் காந்தி உறுதி

ன்யாகுமரி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைகளை நடத்தி வருகிறார்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் ஒன்றிணைந்து களம் இறங்க உள்ளன.  இதற்கான பிரச்சாரம் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகின்றது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தென் மாவட்டங்களில் தொடர்ந்து பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தியைக் காண ஏராளமானோர் வருகின்றனர்.  அவருடைய பிரச்சாரத்துக்கு மாநிலம் முழுவதுமே நல்ல வரவேற்பு காணப்படுகிறது.  நேற்று கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தார்

தனத் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி, “தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக விளங்கி வருகிறது.   இந்த தமிழகத்தின் மொழியான தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க நான் துணை நிற்பேன்.  மேலும் அனைத்து மொழி. கலாச்சாரம் மற்றும் மத பாதுகாப்புக்கும் துணையாக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.