ஜம்மு காஷ்மீரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

டெஹ்ராடூன்:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 3 வீரர்களின் குடும்பத்தாரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.


உத்தராகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் நடந்த பேரணியில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
அதன்பின்னர், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் உயிர்த் தியாகம் செய்த 3 வீரர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்தார்.

அவருடன் சென்ற காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் சூர்யகாந்த் தஸ்மானா கூறும்போது, “காஷ்மீரில் நடந்த பல்வேறு தீவிரவாதிகளின் தாக்குதல்களில் உயிர்த் தியாகம் செய்த மோகன் லால் ரத்தூரி,மேஜர் விபூடி சங்கர் தவுந்தியால், மேஜர் சிட்ரெஸ் பிஸ்த் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று, அவர்களது குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்” என்றார்.