Random image

குஜராத் விவசாயிகளுடன் ராகுல் காந்தி சந்திப்பு

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செயலாளரான ராஜிவ் சத்தவ் தகவல் அளித்துள்ளார்.

rahul-gandh

ஜூலை 15 மற்றும் 16ம் தேதிகளில் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மற்றும் அம்ரேலி மாவட்டகளை சேர்ந்த விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார் என்று ராஜிவ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மாவட்டங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாவ்நகர் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறியவும், புல்லட் ரயில் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறியவும் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.