சிங்கப்பூர் : ராகுல் காந்தி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்தாய்வு

சிங்கப்பூர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நிகழ்த்தினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இன்று (8.3.18) முதல் வரும் பத்தாம் தேதி வரை அவர் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயணம் செய்கிறார்.   இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இன்று ராகுல் காந்தி இங்குள்ள பிரபல நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக பணி புரியும் இந்தியர்களை சந்தித்து கலந்தாய்வு நிகழ்த்தினார்.   அப்போது அவர் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவை குறித்து அவர்களுடன் பேசி உள்ளார்.

இந்த கலந்தாய்வுக்குப் பின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள லீ குவான் யூ என்னும் ஒரு கல்வி நிறுவனத்தில் உரை ஆற்ற உள்ளார்.