மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்ற நிபந்தனையற்ற ஆதரவு : ராகுல் காந்தி

டில்லி

களிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அளிக்க உள்ளதாக ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் வருடம் பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33% இட ஒதுக்கீடு அளிக்க மசோதா ஒன்று மக்களவையில்  அளிக்கப்பட்டது.   ஆனால் அந்த மசோதா  இது வரை நிறைவேற்றப்படவில்லை   இந்த மசோதாவுக்கு சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம்,  திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

விரைவில் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கூட உள்ளது.   அந்த தொடரில் இந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமருக்கு வலியுறுத்தி உள்ளார்.   அத்துடன் இந்த மசோதா நிறைவேற காங்கிரஸ் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கும் எனவும் கூறி உள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில் ”நமது பிரதமர்  தம்மை பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக அறிவித்துக் கொள்கிறார் அல்லவா?  இதோ அதை நிருபிக்க ஒரு வாய்ப்பு.  அவர் நாடாளுமன்றத்தில் தனது கட்சியினர் மூலம் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றட்டும்.   இதற்கு காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவை அளிக்க உள்ளது”  என பதிந்துள்ளார்.