டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்னாடகா மாநில தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 24 முதல் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

தற்போது நடைபெற உள்ள கர்னாடகா சட்டசபை தேர்தல் குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.    ஆயினும் காங்கிரஸ் – பாஜக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்கள் தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.    அதில் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 24 ஆம் தேதி முதல் 3 நாட்கள் கர்னாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இந்த சுற்றுப் பயணத்தின் போது அவர் லிங்காயத்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பல தெருமுனைக் கூட்டங்களிலும்,  பொதுக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்கிறார்.   குறிப்பாக கர்னாடகா – மும்பை வழியிலுள்ள பல பகுதிகளில் அவபயணம்  செய்கிறார்.   .

வரும் பிப்ரவர் 24 அன்று பெல்காம் பகுதியில் உள்ள அதானியில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.  அங்கிருந்து பிஜப்பூரில் உள்ள திக்கோடாவுக்கு செல்கிறார்.   அங்கு நடக்க உள்ள ஒரு மாபெரும் பெண்கள் பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார்.

அடுத்த நாள் திக்கோடாவில் இருந்து கிளம்பி பிஜப்பூர் வரை உள்ள பல ஊர்களில் கூட்டங்களில் உரையாற்றுகிறார்.   இரவு பிஜப்பூரில் தங்கி அடுத்த நாளான பிப்ரவரி 26 அன்று ஹுப்ளி வரை பயணம் செய்கிறார்.    ஹூப்ளியில் நடைபெறும் ஒரு மாபெரும் பேரணியில் கலந்துக் கொண்டு அன்று இரவு டில்லி திரும்புகிறார்.