சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் : ராகுல் காந்தி பங்கேற்பு

டில்லி

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.   அக்கட்சி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தது.   ஆனால் பாஜக அரசு அதற்கு மறுத்தது.  அதை ஒட்டி தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது.

அதன் பிறகு இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.     இன்று டில்லியில் உள்ள ஆந்திர பவனில் சந்திரபாபு நாயுடு தனது ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இரவு 8 மணி வரைக்கும் நடக்க உள்ள்து.  இதில் ஆந்திர மாநில அமைசர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப்  போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துக் கொண்டுள்ளார்.

நாளை தனது கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு ஒன்றை சந்திரபாபு நாயுடு அளிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.