கமதாபாத்

காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை என்றுமே அவமதிக்காது என ராகுல் காந்தி கூறினார்.

குஜராத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி மாநிலம் எங்கும் பிரசாரம் செய்து வருகிறார்.   தற்போது அவர் குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா பகுதியில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.   சுற்றுப் பயணத்தில் அவர் சமூக ஆர்வலர்களுடன் உரை ஆற்றினார்.

காங்கிரஸ் கட்சி பிரதம் மோடியை விமர்சனம் செய்யும் போது ஒரு வரையறைக்குள்தான் செயல்படுகிறது.   ஆனால் பா ஜ க அப்படி இல்லை.   மோடி குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமரை அவமதிக்கும் விதத்தில் தான் பேசுவார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மோடியின் நடவடிக்கையை விமர்சிக்கும்.   அவருடைய தவறுகளைச் சுட்டிக் காட்டும்.  எப்போதும் பிரதமர் பதவியை விமர்சிக்காது.  இதுதான் நமக்கும் பாஜகவுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஆகும்.    அவர்கள் அளவுக்கு நாம் இறங்க முடியாது.   மோடியின் மேல் கோபம் இருந்தாலும் அவர் பிரதமாராக இருப்பதால் எல்லை தாண்டி விமர்சிக்கக் கூடாது.” என ராகுல் காந்தி தனது உரையில் தெரிவித்தார்.