அரசியல் சாசனத்தை காக்க வேண்டியது நமது கடமை :  ராகுல் காந்தி

டில்லி

ரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தல் நிறைய உள்ளதால் அதை காக்க வேண்டியது நமது கடமை என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நிறுவன தின விழா இன்று டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் கொண்டாடப்பட்டது.   அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

ராகுல் தனது உரையில், “பாஜக தனது அரசியல் லாபங்களுக்காக பல பொய்களை பயன்படுத்தி வருகிறது.   காங்கிரஸ் கட்சி எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் உண்மையை என்றும் விட்டுக் கொடுக்காது.   தற்போது மக்களைச் சுற்றி ஒரு ஏமாற்று வலையை பாஜக பின்னி உள்ளது.   அரசியல் சாசனத்துக்கு பாஜகவால் அச்சுறுத்தல் உள்ளது.   அதிலிருந்து அரசியல் சாசனத்தைக் காப்பது நமது கடமை ஆகும்.

பாஜக வின் மூத்த நிர்வாகிகள் பலர் அரசியல் சாசனத்தின் மீது நேரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்    அந்த தாக்குதலை முறியடிப்பது காங்கிரஸ் தொண்டர் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.    நமக்கும் பாஜக வினருக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே நாம் உண்மையை என்றும் கைவிட மாட்டோம் என்பதே ஆகும்”  எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rahul gandhi said Saving constitution is our duty
-=-