கொரோனாவின் தாக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரழிவு… ராகுல்காந்தி

டெல்லி:

கொரோனாவின் தாக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME)  பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதலில் 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது மே 3ந்தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.  இதனால் அனைத்து வணிகங்களும் முடங்கியதுடன், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் அதிலிருந்து மீள்வது குறித்து கட்சியின் கருத்துகளை தெரிவிக்க, மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற காங்கிரஸ் தலைமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை அமைத்தது. இதில் ராகுல் காந்தி, சிதம்பரம், மணீஷ் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.’

இந்த குழு, தினமும் ஆலோசனை நடத்தி, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி, அரசுக்கு யோசனைகள் கூறும்’ என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தாக்கம்,  சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை (MSME) பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் உதவி தேவை. ஒரு MSME பொருளாதார தூண்டுதல் தொகுப்பு voiceofmsme.in அல்லது எங்கள் சமூக ஊடக தளங்களில் எதைக் குறிக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளையும் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்,

என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில்   “HelpSaveSmallBusinesses” என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கூறினார்.

இதன்மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் காங்கிரஸ் குழு ஆராயந்து அறிவித்து வருகிறது. அதன்படியே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழு ஏழைகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு ரு.7500 டெபாசிட் செய்ய  வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி கட்சி கோரியுள்ளது, இந்த நெருக்கடி நேரத்தில் உதவ வேண்டும் என்றும் விரைவில், எம்.எஸ்.எம்.இ துறைக்கு விரிவான மறுமலர்ச்சி திட்டத்தை சமர்ப்பிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் உள்ள மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

(MSME stands for Micro, Small, and Medium Enterprises- MSME என்பது மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் குறிக்கிறது)