கேரளா விமான விபத்து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன்: ராகுல் காந்தி டுவிட்

டெல்லி: கேரளா விமான விபத்து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, தரையிறங்கும்போது ஓடுபாதையில்   சறுக்கியபடி சென்று  கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானம் 2 ஆக உடைந்தது. விமானிகள், பணிப்பெண்கள், கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்திருந்தனர். விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் வசந்த் என்ற விமானியும், 2 பயணிகளும் பலியாகி உள்ளனர்.

மீட்கப்பட்ட மற்ற பயணிகளில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய மீட்புப்படை வீரர்கள், காவல்துறையினர் மீட்புப்பணியில் இறங்கி உள்ளனர்.

இந் நிலையில் விபத்து குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறி உள்ளார்.