மும்பை:

ஆர் எஸ் எஸ் அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மஹாராஷ்ட்ர மாநிலம் பிவாண்டி என்ற இடத்தில்
பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, மகாத்மா காந்தியை கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள்தான்
என்று குற்றஞ்சாட்டினார். அப்போது பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் ராகுல் காந்தியை கண்டித்து முழக்கமிட்டனர்.
மஹாராஷ்ட்ர மாநிலம் ஆர் எஸ் எஸ் கட்சியை சேர்ந்த ராஜூ குண்டே என்பவர்
பிவாண்டியில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

பிவாண்டி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி தன்குற்றத்தை ஒப்புக்கொண்டால்
வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக ராஜூ குண்டே நீதிமன்றத்தில் எழுத்துமூலம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தியின் வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல் ” ராகுல் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்
அவர் பொறுப்பேற்றுள்ளார். எந்த வார்த்தையையும் ராகுல் திரும்ப பெற போவதில்லை” என்று கூறியுள்ளார்.