டெல்லி: நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர 2ம்  கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆனாலும், கொரோனா அறிகுறியுடன் பலர் நாள் தோறும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக அதிகரித்து, உயிரிழப்பு 824 ஆக இருக்கிறது. இந் நிலையில், நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:  கொரோனாவை ஒழிப்பதற்கு விரைவான பரிசோதனை முக்கியமானது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் தற்போது 40,000 பரிசோதனைகளே நடத்தப்படுகின்றன.

குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பரிசோதனைகளாவது மேற்கொள்ள வேண்டும். அதற்கு போதுமான கருவிகள் நம்மிடம் இருப்பதால் பிரதமர் மோடி இது தொடர்பாக விரைந்து செயல்பட்டு சிக்கலை தீர்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.