டில்லி:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மகன் சவுரியா நடந்தும் ஒரு நிதி சேவை நிறுவனத்தில் 4 மத்திய அமைச்சர்கள் பங்கு தாரர்களாக இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கு ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘ஷா&ஜாத £’வின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது பாஜக.வில் புதிய வெளியீடு ‘அஜித் சவுரியா’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தோவல் மகன் பங்குதாரராக உள்ள திங்க் டாங்க் இந்தியா பவண்டேஷன் என்ற நிதி சேவை நிறுவனத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சில மத்திய அமை ச்சர்கள் உயர் பதவியில் உள்ளனர். இந்த நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தகள் செய்துள்ள சில வெளிநாட்டு மற்றும் இந்திய கார்பரேட் நிறுவனங்களுடன் நிதி தொடர்பில் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் இயக்குனர்களாக உள்ள இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தில் செயல் இயக்குனராக சவுரியா தோவல் உள்ளார். மேலும் இவர் ஜெமினி நிதி சேவை என்றொரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பரிமாற்றம் மற்றும் மூலதன சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘இந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ள 4 மத்திய அமைச்சர்களையும் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் வலியுறுத்தியுள்ளார்.