மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஸ்டாலின் ஆதரவுக்கு ராகுல் நன்றி

டில்லி

களிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு மு க ஸ்டாலின் ஆதரவு அளித்ததை ஒட்டி ராகுல் காந்தி டிவிட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று தொடங்கி உள்ள பாராளுமன்ற மழைக்காலத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ஆகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  அதற்கு அரசுக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு  பல கட்சித் தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திமுக வின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “கலைஞர் கருணாநிதி மக்கள் பிரதிநிதிகளாக மகளிர் அதிக அளவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியவர் ஆவார்.  எனது கட்சியின் சார்பாக நானும் மகளிர் ஒதுக்கிட்டு மசோதா விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எனது ஆதரவை அளிக்கிறேன்.   அவர் பிரதமரை வற்புறுத்தி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.” என பதிந்துள்ளார்.

இதற்கு ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “நன்றி முக ஸ்டாலின்.  ஒரு மாபெரும் தலைவரின் மகனாகவும் உண்மையான மக்கள் தலைவராகவும் நீங்கள் உள்ளீர்கள்.   பெண்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கான திறவுகோல்கள் ஆவார்கள்.   இதை மகளிர் இடஓதுக்கீடு மசோதா உறுதிப்படுத்துகிறது.   இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து பாடுபட வேண்டிய நேரம் இது” என பதில் அளித்துள்ளார்.