வயநாடு:

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி என்ற பெயரில் 2 பேரும், காந்தி என்று முடியும் பெயரில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
உத்திரப்பிரதேசம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.


வயநாட்டில் போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் ராகுல்காந்தி என்ற பெயரில் கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவரும், கோவையை சேர்ந்த ஒருவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மூன்றாவது நபராக திருச்சூரைச் சேர்ந்த சிவபிரசாத் காந்தி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கே.இ. ராகுல் காந்தி என்பவர் எம்பில் படித்துள்ளார்.

கோவையை சேர்ந்த கே.ராகுல்காந்தி நிருபராக பணியாற்றுகிறார். இருவரும் வருமான வரி செலுத்துவோர்.