ராஜஸ்தான் முதல்வர் யார் ? : சச்சின் பைலட், அசோக் கெகலாத் டில்லி பயணம்

டில்லி

ராஜஸ்தான் முதல்வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்க உள்ளதால் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெகலாத் டில்லி வந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவு வெளியாகியது. இதில் ஆளும் கட்சியான பாஜக தோல்வி அடைந்தது. மொத்தம் 199 தொகுதிகளில் 99 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றதால் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள்து.

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நேரத்தில் முதல்வர் பதவிக்கு அசோக் கெகலாத் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே போட்டி உள்ளது. நேற்று சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரச் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கி தீர்மானம் இயற்றப்பட்டது.

அதை ஒட்டி அசோக் கெகலாத் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரும் டில்லி வந்துள்ள்னர். இன்று அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.