சிங்கப்பூர், மலேசியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார் ராகுல்காந்தி

சென்னை:

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம்  செல்கிறார். அப்போது அங்கு வாழ்ந்து வரும்  இந்திய வம்சாவழியினர் மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோர், இந்திய  தொழிலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இந்த வார இறுதியில் வெளிநாடு செல்லும் ராகுல்காந்தி 8 மற்றும் 9ந்தேதி சிங்கப்பூரிலும், 10ந்தேதி மலேசியாவிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

சிங்கப்பூல் மலேசியாவில் பெருமளவிலான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில்வ, அவர்களிடையே ராகுல்காந்தி கலந்துரை யாட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள இந்திய தொழிலதிபர்களை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது, பாராளுமன்றத்தில் பிஎன்பி மோசடி குறித்து பரபரப்பாக அமளி நடைபெற்ற வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஏற்கனவே,  கடந்த ஆண்டு அமெரிக்க மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு ராகுல்காந்தி  இதேபோன்று சுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது,  காங்கிரஸின் சாதனைகளை முன்னிலைப்படுத்தி பேசினார்.

அமெரிக்காவில் பெர்கேலி பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார் ராகுல், பிரதமல் மோடி குறித்தும் பேசினார். அதையடுத்து நியூ ஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார் மற்றும் இந்தியாவின் எதிர்கால சவால்களைப் பற்றி பேசினார்.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்தும் பேசினார்.

மேலும், மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியா எதிர்கொள்ளும் இரண்டு அச்சுறுத்தல்கள் கொண்டுள்ளது என்ற ராகுல், மோடி அரசால்  வேலை வாய்ப்புகளை  உருவாக்க முடியாததும், பிரிவினைவாதத்தை தடுக்காதது குறித்தும் பேசினார்.

ராகுலின் பேச்சு பாரதியஜனதாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. உடடினயாக அங்கிருந்து பதில் வந்தது. ராகுல் முதிர்ச்சியற்றவராக பேசுகிறார் என்று விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருசில மாநில சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, இத்தாலி பயணமான நிலையில், தற்போது,   நாகலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில ராகுல் சிங்கப்பூர் மலேசியா பயணம் மேற்கொள்கிறார்.