கோவா

றைந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்ச்சருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் உடலை  ராகுல் காந்தி தோள் கொடுத்து தூக்கி உள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா நேற்று முன் தினம் கோவாவில் மரணம் அடைந்தார்.  கடந்த1647 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி பிறந்த இவர் கடந்த 1993 முதல் 1996 வரை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.  மேலும் இவர் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு ரேபரேலி, தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.   இவர் அமேதி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.  கடந்த 2004 ஆம் வருடம் ராகுல் காந்தி முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் சதீஷ் சர்மா ஒவ்வொரு கிராமத்துக்கும் உடன் சென்று பிரசாரம் செய்துள்ளார்.

அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.   ராகுல் காந்தி அவரது மறைவால் மிகவும் துயருற்றுள்ளார்.  அவரது உடல் இறுதிச் சடங்குக்கு எடுத்துச் சென்ற போது ராகுல் காந்தி அவரது உடல் அங்கு சேரும் முன்பே சென்றிருந்து காத்திருந்துள்ளார்.    மேலும் அவரது உடலைத் தனது தோள் கொடுத்துத் தூக்கி சிதைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

சதீஷ் சர்மா மறைவையொட்டி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தியும் தனது நிகழ்வுகளை ரத்து செய்து விட்டு அங்கு வந்துள்ளார்