கேள்விகளை பரிசீலிக்கும் பாஜக பதில்களையும் பரிசீலிக்குமா : ராகுல் காந்தி

டில்லி

மீபத்தில் நடந்த பிரதமர் மோடியின் வீடியோ நேர்காணல் குறித்து காங்கிரஸ் தலவைர் ராகுல் காந்தி டிவிட்டரில் கேலி செய்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாஜகவின் வாக்குச் சாவடி தொண்டர்களுடன் நேர்காணல் ஒன்றை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்தினார்.   அப்போது  ஒரு தொண்டர் ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதித்துள்ளதை சுட்டிக் காட்டி கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.   இதற்கு பதில் சொல்ல மோடி மிகவும் தடுமாறியதாக செய்திகள் வெளியாகின.

இந்த நேர்காணல்களின் போது கேட்கப்படும் கேள்விகள் எவை என்பதை பாஜக தலைமையகம் 48  மணி நேரம் முன்பே பெற்று அவைகளை மோடிக்கு அளிப்பது வழக்கம்.   அப்படி இருந்தும் இத்தகைய கேள்வியை பரிசீலிக்காமல் அளித்தது குறித்து தலைமை அதிருப்தியை தெரிவித்தது.   அதை ஒட்டி பாஜக அலுவலர்கள் இனி கேள்விகளை மிகவும் ஆழ்ந்து பரிசீலனை செய்யப் போவதாக அறிவித்தனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

வணக்கம் புதுச்சேரி!

துயரப்படும் நடுத்தர மக்களுக்கு நமோவின் பதில் இது தான்

செய்தியாளர் சந்திப்பை விடுங்கள், அவரால் அவர் கட்சி வாக்குச்சாவடி தொண்டர்களின் கேள்விக்கே பதில் அளிக்க முடியவில்லை.

கேள்விகளை பரிசீலிக்கும் பாஜகவின் அருமையான எண்ணத்தைப் போல பதில்களையும் பரிசீலிக்கும் எண்ணம் உள்ளதா

என பதிந்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பதிவு டிவிட்டரில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.