ரஃபேல் விவகாரம்: மோடிக்கு 4 கேள்விகளை எழுப்பி ‘செக்’ வைத்த ராகுல்காந்தி

டில்லி:

பிரதமர் மோடி பாராளுமன்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரஃபேல் முறைகேடு காரணமாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் மோடி லோக்சபா வருவதை தவிர்த்து வரும் நிலையில், இதுகுறித்து 4 கேள்விகளை எழுப்பி, பிரதமர் மோடி  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி டிவிட் செய்திருந்தார்.

இந்த கேள்வி குறித்த டிவிட்டர் பதிவில்  3வது கேள்வி மட்டும் விடுபட்டு 1, 2 மற்றும் 4வது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கேட்கப்பட்ட 4 கேள்விகளில் 3-வது கேள்வி மட்டும் விடுபட்டது ஏன் என்பது குறித்தும் ராகுல்காந்தி விளக்கி உள்ளார்.

The Missing Q3! என்று பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ,  3-ஆவது கேள்வியை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துவிட்டார். ரபேலை விட கேள்வி 3 மிகவும் சர்ச்சைக்குரியதாகிவிட்டது.

மோடி அவர்களே,  ரபேல் ஒப்பந்தங்கள் தொடர்பான கோப்புகளை பாரிக்கர் ஏன் அவரது படுக்கை அறையில் வைத்துள்ளார். அந்த கோப்புகளில் உள்ள ரகசியம் என்ன? என்பதை எங்களுக்கு கூறுங்கள் என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல்காந்தியின் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஃபேல் விவகாரம் தொடர்பாகவும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பாராளுமன்றம் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று  அதிமுகவினரின் கடும் அமளிகளுக்கு இடையே ராகுல்காந்தி  ரபேல் விவகாரம் குறித்து பேசினார். அப்போது மோடி அரசுக்கு  பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

மோடி அரசுக்கு ஆதரவாகவே அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி வருவதாக தெரிவித்த ராகுல், அவர்களுக்கு பின்னாள் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  ரபேல் விவகாரம் குறித்து பதிலளிக்க முடியாததால் மோடி அவரது அறையில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் ராகுல்காந்தி தனது டிவிட்டர் மூலமாக மோடிக்கு  4 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அந்த கேள்விகள்:

Tomorrow, the PM faces an Open Book #RafaleDeal Exam in Parliament.

Here are the exam questions in advance:

Q1. Why 36 aircraft, instead of the 126 the IAF needed?

Q2. Why 1,600 Cr instead of 560 Cr per aircraft.

Q4. Why AA instead of HAL?

Will he show up? Or send a proxy?

  1. இந்திய விமான படைக்கு 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் மட்டுமே தேவைப்பட்டது ஏன்?
  2.  ஒரு விமானத்தின் விலை 560 கோடி என முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு பேசி வைத்திருந்த நிலையில் ரூ 1600 கோடிக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்?
  3. (கேள்வி கிடையாது)
  4.  இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் விமானங்களை தயார் செய்யும் ஒப்பந்தத்தை அளிக்காமல் அனில் அம்பானியிடம் அனுப்பியது ஏன்?

மோடிஜி நேரடியாக நாடாளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்கிறாரா இல்லை அவரது பிரதிநிதி மூலம் பதில் கொடுக்கிறாரா என்பதை பார்ப்போம் என்று ராகுல் கூறியுள்ளார்.

விடுபட்ட 3வது கேள்வி குறித்து மற்றொரு டிவிட்டில்  பதிவிட்டுள்ளார். அதில்,  3-ஆவது கேள்வியை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்து விட்டார். ரபேலை விட கேள்வி 3 மிகவும் சர்ச்சைக்குரியதாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

விடுபட்ட 3வது கேள்வி:

3: மோடி அவர்களே ரபேல் ஒப்பந்தங்கள் தொடர்பான கோப்புகளை பாரிக்கர் ஏன் அவரது படுக்கை அறையில் வைத்துள்ளார். அந்த கோப்புகளில் உள்ள ரகசியம் என்ன? என்பதை எங்களுக்கு கூறுங்கள் என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தியின் அதிரடி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. பிரதமர் மோடி இதுகுறித்து பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

You may have missed