Random image

மானசரோவர் ஏரி மிகவும் மென்மையானது – வெறுப்பு காட்டாது: ராகுல்காந்தி டிவிட்

கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தற்போது  மானசரோவர் பகுதியில் தங்கி உள்ளார். அங்குள்ள மானசரோவர் ஏரியின் புகைப்படத்தை தனது டிவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், மானசரோவர் ஏறி மிகவும் மென்மையானது சாந்தம் மற்றும் அமைதியாக உள்ளது. அது எல்லா வற்றையும் கொடுத்து தன்னை இழக்கிறது. இந்த ஏரியில் இருந்து  எவரும் நீர்  எடுத்து  குடிக்கலாம். அதில் வெறுப்பு காட்டுவது கிடையாது. அதனால்தான்  இந்தியாவில் நாம் இந்த  நீர்நிலையை வணங்குகிறோம்என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம் (ஆகஸ்டு)  31-ம் தேதியன்று கைலாஷ் யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி அன்றே  நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றார். இந்த நிலையில் தற்போது மானசரோவர் பகுதியில் முகாமிட்டு உள்ளார். அங்குள்ள மானசரோவர் ஏரியை மற்றும் கைலாஷ் மலையின் அழகை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

எற்கனவே கைலாஸ் யாத்திரை குறித்து டிவிட் செய்திருந்த ராகுல், கைலாஷ் என்னை அழைக்கிறார். இந்த வாய்ப்பைப் பெற்றதற்கா  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்த அழகான பயணத்தில் நான் பார்க்கும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமயத்தில், விமான விபத்தில் இருந்து தப்பியதற்கு நன்றிக்கடனாக ராகுல் காந்தி கைலாஷ் யாத்திரை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.