ராகுல்காந்தியின் ட்விட்டர் தளம் ஹேக் செய்யப்பட்டு அதில் ஆபாச செய்திகள் பரிமாற்றம்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளம் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு அதில் ஆபாச, அவதூறு செய்திகள் அவர் வெளியிடுவது போல பரப்பப் படுகிறது. அவரது ட்விட்டர் தளத்துடன் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர்.

rahul7

“லீஜன்” என்ற குழுவால் அவரது ட்விட்டர் தளம் ஹேக் செய்யப்பட்டதாக அவர்களே ராகுல்காந்தியின் தளத்திலிருந்து வெளியிட்ட ஒரு தகவல் சொல்லுகிறது. இந்த தளத்தில் தற்பொழுது ராகுல்காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து மோசமான ஆபாசமான அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் சில செய்திகளின் ஸ்கிரீன் ஷாட் கீழே. இதில் நாகரீகம் கருதி ஆபாச வார்த்தைகள் மறைக்கப்பட்டுள்ளது.

rahul7a

ராகுல்காந்தி அந்த ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவதில்லை. அது அவரது அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில மணி நேரங்கள் கழித்து அந்த ஆபாச செய்திகள் நீக்கப்பட்டு விட்டன, தற்பொழுது  தளம் மறுபடியும் வழக்கம்போல இயங்கி வருகிறது.