கருணாநிதியை பார்க்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை

சென்னை:

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை காண அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று பிற்பகல் சென்னை வருகிறார்.

உடல்நலமில்லாமல் வீட்டிலேயே  சிகிச்சை பெற்று வந்த  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மேலும் நலிவடைந்ததை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.30 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ராகுல்காந்தி கருணாநிதியை சந்தித்தபோது எடுத்த படம்

இதற்கிடையில் திமுக தலைவர் கருணாநிதியை காண துணைஜனதிபதி வெங்கையாநாயுடு. அகில இந்திய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குலாம் நபி ஆசாத், முகுல்வாஸ்னிக்  உள்பட வட இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் சென்னை வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து சென்றுள்ளனர். அதுபோல, தமிழக கவர்னர், முதல்வர் உள்பட அனைத்து தரப்பினரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பத்தி னரை பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. திமுக தலைவர் கருணாநிதிiய காண காவேரி மருத்துவமனைக்கு வர இருப்பதாகவும், அப்போது கருணாநிதி  உடல்நிலை குறித்துகருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து பேசுவார் என்றும்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி இன்று மாலை காவேரி மருத்துவமனை வர இருப்பதையொட்டி, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: rahul gandhi visit kauvery hospital today evening for enquire karunanidhi health condition, கருணாநிதியை பார்க்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை
-=-