ராஜஸ்தான் : அஜ்மீர் தர்காவுக்கு சென்ற ராகுல் காந்தி

ஜ்மீர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு சென்று ராகுல் காந்தி பிரார்த்தனை செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தற்போது ராகுல் காந்தி தேர்தலை முன்னிட்டு பிரசாரப்பயணம் செய்து வருகிறார்.

இஸ்லாமிய மதப் பெரியவர்களை அடக்கம் செய்யும் இடத்துக்கு தர்கா எனப் பெயராகும். அங்கு மலர் போர்வை போர்த்துதல் போன்ற பிரார்த்தனைகளை பலரும் நிகழ்த்துவது வழக்கம். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தர்கா ஒன்று அமைந்துள்ளது.

இந்த தர்கா சுஃபி ஞானியான குவாஜா மெய்னுதீன் சிஸ்தி அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இன்று இந்த தர்காவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்து பிரார்த்தனை செய்துள்ளார்.

 

அவருடன் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெகலாத் ஆகியோரும் அங்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

மலர் போர்வை பிரார்த்தனையை செய்த பிறகு ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடர்ந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி