ராகுல் காந்தி கன்யாகுமரி வருகிறார் : திருநாவுக்கரசர் தகவல்

சென்னை

ராகுல் காந்தி கன்யாகுமரி மாவட்டத்துக்கு நாளை வருவார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கன்யாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.   இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி பதிந்துள்ளார்.

அதில் அவர் “காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராகுல்ஜி ஓகி புயலால் பாதிக்கப்பட்டுல்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறைக்கு நாளை 14ஆம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு வருகிறார்” என தெரிவித்துள்ளார்.