’2k அழகானது காதல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்க உள்ளார் நடமாடும் நகைக்கடை என்று கூறப்படும் ஹரி நாடார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சுரண்டையில் சந்தித்தார் ஹரி நாடார். ஹரி நாடார், பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் முக்கிய தூண்.

தமிழக மக்களுக்கு நாளுக்கு ஒரு அதிரடி செய்தி கொடுத்து அதிர வைக்கும் ஹரி நாடார், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆங்கிலத்தில் பேசி மக்கள் பிரச்னையை அழகுற எடுத்துரைத்துள்ளார்.

ஆங்கிலம் இந்தி தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி ஹரிநாடார் பேசியதை ஆர்வத்துடன் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி ஹரிநாடார் சுமார் 4 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டிருப்பதையும் ராகுல் காந்தி மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்ததாக கூறப்படுகிறது. ஹரிநாடார் ராகுல் காந்தியை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.