கர்நாடக சட்டசபை தேர்தல் : ராகுல் காந்தி 24 நாட்கள் பிரச்சாரம்

டில்லி

வரும் மே மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக 24 நாட்கள் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது.   இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக கடுமையாக பாடுபட்டு வருகிறது.    இதை ஒட்டி மோடி மற்றும் அமித்ஷா பலவித பிரசாரத் திட்டங்களை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றனர்.    வரும் மே மாதம் 12 ஆம் தேதி கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலை ஒட்டி ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்கள் ஆசி சுற்றுப் பயணம் என்னும் பெயரில் பயணம்ச் செய்து பலதரப்பட்ட மக்களை சந்தித்துள்ளார்.  தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் 24 நாட்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தர்ப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பயணத்தின் போது ராகுல் காந்தி சுமார் 20 பொதுக்கூட்டங்களுக்கு மேல் பேச உள்ளார்.  அத்துடன் பேருந்துகளில் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளார்.     அவருடைய இந்த நேரடி அணுகுமுறை பிரச்சாரம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை தொடர உதவும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கூறி உள்ளனர்.