அமெரிக்க புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி!

புதுடெல்லி: அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில், “அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள்! அவர் அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவதோடு, அந்நாட்டை சரியான, திறமான திசையில் வழிநடத்துவார் என்று நம்புகிறேன்” என்றுள்ளார் ராகுல் காந்தி.

இவரின் இந்த டிவீட்டை வரவேற்றுள்ளனர் பலர். ‍அமெரிக்கா இந்த 2020ம் ஆண்டில் தனது தவறை உணர்ந்துள்ளது. இதேபோன்று இந்தியா 2024ம் ஆண்டு தனது தவறை உணரும் என்றும் ராகுல் காந்திக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.