Random image

கைலாஷ் யாத்திரையில் ராகுல் : புதிய புகைப்படங்கள் வெளியீடு

மானசரோவர்

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது புகைப்படங்களையும் விடீயோவையும் வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் உள்ளார்.   பாதுகாப்புக் காரணங்களால் அவருடைய பயண திட்டங்களும் தங்குமிடங்களும் அறிவிக்கப்படவில்லை.  அதை ஒட்டி பாஜக பல பொய் பிரசரங்களை செய்து வருகிறது.

ராகுல் காந்தி வெளியிட்ட மானசரோவர் ஏரி புகைப்படத்தை பற்றி தவறான தகவலை பாஜக தொண்டர் ஒருவர் வெளியிட்டார்.

அதை ஒரு காங்கிரஸ் தொண்டர் பொய் என நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் கைலாஷ் யாத்திரை  புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

அத்துடன் அவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

இதை முகநூலில் பகிர்ந்த அவருடைய ஆதரவாளர் ஒருவர் ”மக்களின் அன்பைப் பெற்றவர்.  அதனால் தான் அவர் மக்களின் பிரதமராக உள்ளார்” என முகநூலில் பதிந்துள்ளார்.