கராத்தே வீரர் ராகுல்! புதிய புகைப்படங்கள் வெளியீடு

டில்லி:

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கராத்தே சண்டையிடும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

சமீபத்தில் டில்லியில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞர்களுக்கான மாநாடு நடந்த்து. அதில் கலந்துகொண்ட ராகுல் காந்தியிடம் அரசியல்  அல்லாத வித்தியாசமான கேள்விகள் கேட்கப்பட்டன.

பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுல் காந்தியிடம் திருமணம் மற்றும் விளையாட்டு தொடர்பான கேள்விகள் கேட்டார்.

இதற்கு உடனே பதில் அளிக்க தொடங்கிய ராகுல் காந்தி தனது கல்யாணம் குறித்து முதலில் பேசினார். அதன்பின்பாக அவரது விளையாட்டு அனுபவங்கள் குறித்து பேசினார். இதில் அவர் விளையாட்டு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

 

 

ராகுல், “கண்டிப்பாக எனக்கு திருமணம் நடக்கும். ஆனா அது எப்ப நடக்கணும்னு இருக்கோ அப்போது நடக்கும், அது வரைக்கும் காத்திருங்கள்’ என்று கலகலப்பாக பதில் அளித்தார்.

பிறகு தனது விளையாட்டு ஆர்வம் குறித்து பேசிய ராகுல், “நான் எப்போதும் நீச்சல் பயிற்சி செய்வேன். அதேபோல கராத்தேயிலும் ஆர்வம் உண்டு. ஜப்பானின் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறேன். நான் தினமும் இதை பயிற்சி செய்கிறேன்” என்றார்.

இதுகுறித்து சீக்கிரம் வீடியோ போடும்படி கேட்ட விஜேந்தர் சிங்கிடம் ”தாராளமாக, வெளியிடுகிறேன்” என்று ராகுல் தெரிவித்தார்.

 

இந்த நிலையில் ராகுல் கராத்தே பயிற்சி செய்யும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது இவை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.