தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்ற ராகுல் காந்தி : முழு விவரம்

 

டில்லி

ராகுல் காந்தி பிளாக் பெல்ட் பெற்றதாகக் கூறிய தற்காப்புக் கலையான ஐக்கிடோ பற்றிய முழு விவரங்கள் இதோ :

சமீபத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிஎச்டி சேம்பர் ஆஃப் காமர்சில் ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தினார்.   அந்த நிகழ்வில் இந்தியக் குத்துச்சண்டை வீரர் விஜெந்தர் சிங் எழுப்பிய ஒரு கேள்விக்கு,  தான் நீச்சல் உட்பட பல விளையாட்டுகளில் கலந்துக் கொண்டதாகவும்  ஜப்பானிய தற்காப்புக் கலையான் ஐக்கிடோவில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளதாகவும் கூறினார்.    இது அங்கு மிகவும் பரபரப்பை உண்டாக்கியது.  ஐக்கிடோ என்னும் தற்காப்புக் கலையைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம்

ஐக்கிடோ என்னும் இந்த விளையாட்டு மொரிஹெய் யுஷிபா என்பவரால் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது.   இது ஆயுதம் ஏந்தியும் ஆயுதம் இல்லாமலும் சண்டை முறையாகும்

ஐக்கிடோ என்பது பல நூற்றாண்டுகளாக உல்ல பல ஜப்பானிய தற்காப்புக் கலைகளின் பல நுட்பங்களை உள்ளடக்கியது ஆகும்.  இதில் ஜப்பானிய முறை மட்டுமின்றி இந்தியா மற்றும் சீன முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

இது மூன்று நாடுகளின் கலைகளை உள்ளடக்கியதால் இது வெறும் சண்டைக்கலை மட்டும் அல்லாமல் இதைக் கற்பவர்களிடைய ஒழுக்கத்தையும் உடல் நலம் பேணும் பழக்கத்தையும் ஊக்குவிக்கிறது.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்வோர் எதிராளியை தோற்கடிப்பது முக்கியமில்லை.   எதிராளியுடன் இணைந்து நமது உடற்பயிற்சி மற்றும் இந்த விளையாட்டின் நுட்பங்களை மக்களுக்கு காட்டுவதே ஆகும்.  இதைப் பொறுத்து வழங்கப்படும் தர வரிசையைப் பொறுத்து வெற்றி அல்லது தோல்வியை போட்டியின் நடுவர்கள் முடிவு செய்வார்கள்.

இந்த விளையாட்டில் எதிரியைத் தாக்க உதைத்தல், குத்துதல், அடித்தல், ஒருவரையோ அல்லது கும்பலையோ எதிர்கொள்ளுதல், ஆயுதம் ஏந்தி வரும் எதிரியை வீழ்த்துதல்  போன்றவைகள் கற்பிக்கப்பட்டாலும், யாரையும் தாக்காமல் வெற்றி கொள்வது எப்படி என்பதே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.