தனது தாய் மற்றும் சகோதரியுடன் அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்

லக்னோ:

உ.பி.யில் போட்டியிடும் ராகுல்காந்தி, இன்று தனது தாயார் சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் வதேராவுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக  வாகன பேரணியில் வந்த அவர்களுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள ராகுல், இன்று  2வது தொகுதியான அமேதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தனத தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் வதேரா மற்றும் பிரியங்காவின் குழந்தைகளுடன் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Amethi, nomination filed  Amethi, Priyanka Gandhi, rahul gandhi, Sonia Gandhi
-=-