ராகுல் காந்தி அதற்குள் லண்டனுக்குச் சென்று விட்டாரா….?

 

மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது.

இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், “#GoBackModi என ஹேஷ்டேக் உருவாக்கியவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது.. ராகுல் காந்தி அதற்குள் லண்டனுக்குச் சென்று விட்டாரா? #RunAwayRahulgandhi தான் இனிமே ஹேஷ்டேக் என நினைக்கிறேன்.

எங்கே தமிழக பாஜக? நாம் நமது வாக்குகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறோம். இது 2021-ல் நிரூபணமாகும். திமுக இன்னும் நன்றாகச் செயல்பட வேண்டும். 2021-ல் எடப்பாடி அவர்கள் வெற்றி பெறுவார். பொய்களால் கண் மறைக்கப்பட்டவர்கள் விரைவில் உணர்வார்கள். ஐபோன் தயாரிப்பு, சீனாவிலிருந்து தமிழகத்துக்கு மாறியது. இன்னும் பல தயாரிப்பும் மாறவுள்ளது . இதற்குக் காரணம் நரேந்திர மோடி” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி