Random image

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி: ராகுல் உறுதி

போபால்:

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தால்,  நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடுமையாக வேலை செய்து வருகிறது. ஏற்கனவே தேர்தல் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், நேற்று  போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார்.

அப்போது,2019ம் ஆண்டு நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தற்போது  மோடி அரசால் அமல்படுத்தப்பட்டு உள்ள  ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்படும் என்றும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ராகுல், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், கிரிக்கெட்டில் ரன் மெஷின் என  சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்படுவது போல, சிவராஜ்சிங் சவுகான் அறிவிப்புகளை வெளியிடும் மெஷின் என கடுமையாக  விமர்சித்தார்.

மேலும், சிவராஜ்சிங் சவுகான்  இதுவரை 21,000 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இருந்தாலும் மத்திய பிரதேசம், மற்ற மாநிலங்களை விட  பின்தங்கியே உள்ளது.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

You may have missed