ரஃபேல் : பிரான்ஸ் அரசு உத்திரவாதம் தராமல் ஒப்பந்தம் : ராகுல் கண்டனம்

--

டில்லி

ஃபேல் போர் விமானங்களுக்கு பிரான்ஸ் அரசு உத்திரவாதம் அளிக்காத போதும் ஒப்பந்தம் செய்ததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு செய்துள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இந்த ஒப்பந்தம் குறித்து நீதிமன்றம் விசாரணைக் குழு ஒன்றை அமைக்கக் கோரி பல மனுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்திரவாதம் அளிக்கவிலை எனக் கூறினார். அதை ஒப்புக் கொண்ட அரசு வழக்கறிஞர் வேணுகோபால் பிரான்ஸ் அரசு உத்திரவாதம் அளிக்கவில்லை எனவும் உறுதி மொழிக் கடிதம் மட்டுமே அளித்ததாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் நாடெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இது இன்னுமொரு முறைகேடு என பல எதிர்க்கட்சிகள் குர்றம் சாட்டி வருகின்றன.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “இந்த ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு ஒப்பந்தம் அளிக்கவில்லை என்னும் புதிய செய்தி வெளியாகியதன் மூலம் மற்றொரு முறைகேடு வெளியாகி உள்ளது. ஒப்பந்தத்துக்கு உத்திரவாதம் அளிக்காமல் ஒரு கடிதத்தை மட்டும் வைத்த்க் கொண்டு செய்த ஒப்பந்தம் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் ஆகும்?” என பதிந்துள்ளார்.