பிரதர் மோடியை கட்டித்தழுவிய ராகுல்: பாராளுமன்ற உறுப்பினர்கள் வியப்பு

டில்லி:

த்தியஅரசு மீது தெலுங்குதேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி தலைமையிலான அரசை கடுமையாக சாடினார். தொடக்கத்தில் சாந்தமாக பேச்சை தொடங்கிய ராகுல்காந்தி, போகப்போக தனது பேச்சில் ஆவேசத்தையும், ஆக்ரோஷத்தையும் காண்பித்தார்.

பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றம் சாட்டி பேசிய ராகுல், பிரதமர் மோடியின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது. அவர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார் என்றும், வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறி ஏமாற்றி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

மோடி தலைமையிலான அரசு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறிய ராகுல், . விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் பாதிக்கப்படுள்ளனர்” என்றார்.

பிரதமர் மோடி தனது கண்ணை பார்த்து பேச வேண்டும் என்றும் ஆவேசமாக மத்தியஅரசுக்கு எதிராக  பேசிய ராகுல்காந்தி, பேசி முடித்ததும் தனது இருக்கையில் இருந்து  விறுவிறுவென வந்து பிரதமர் மோடியை கட்டித்தழுவினார். மோடியும் ராகுலுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

ராகுலின் இந்த செயல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமல்லாது பாஜக உறுப்பினர்கள் உள்பட  அவையில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.