ரபேல் விமான விவகாரம் : இன்று ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ரபேல் விமன விவகாரம் தொடர்பாக கட்சிக் குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.    பாஜக அரசு இந்த விமான கொள்முதலில் முறைகேடுகள் செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.   அதை பாஜக மறுத்த போதிலும் இது குறித்து எந்த விவரங்களும் வெளியிட மறுத்து வருகிறது.

பாஜக ஆட்சியில் நடைபெற்றதாக சொல்லப்படும் இந்த போர் விமான கொள்முதல் ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சிக் குழுவினருடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.   மேலும் இந்த விவகாரம் குறித்த் உண்மை நிலையை மக்களிடம் கொண்டு செல்ல இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே இந்தக் கூட்டம் நடந்த 17 ஆம் தேதி நடைபெற இருந்தது.   பாஜக தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் மரணத்தை ஒட்டி அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  அந்தக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர், “பாஜக ஆட்சியில் நடைபெற்றதில் மிகப்பெரிய ஊழல் ரபேல் ஊழல் ஆகும்.   இது குறித்து நாட்டு மக்களிடம் விரிவாக விளக்க உள்ளோம்.   இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்பு பிரதமர் மோடியின் வீட்டை இளைஞர் காங்கிரசார் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.” என் தெரிவித்துள்ளனர்.