டி-20 போட்டியில் புதிய சாதனை படைப்பாரா கே எல் ராகுல்?

ப்ளோரிடா: மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள டி-20 போட்டியில் இந்திய அணியின் கே எல் ராகுல் ஒரு புதிய சாதனையை படைக்கும் வாய்ப்பு காத்துக்கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில், உலகின் மிகச்சிறந்த டி-20 பேட்ஸ்மென்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார் கே எல் ராகுல். மேற்கிந்திய தீவுகளுடன் 3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டி-20 தொடரில் அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மாநிலத்தில் துவங்கவுள்ளது. இப்போட்டியில் ராகுல் சிறப்பாக செயல்பட்டால், டி-20 போட்டிகளில் விரைவாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார் அவர்.

தற்போது அந்த மைல் கல்லை எட்டுவதற்கு அவருக்கு 121 ரன்களே தேவைப்படுகின்றன. பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 26 இன்னிங்ஸ்களில் 121 ரன்களை எட்டிய உலகின் முதல் வீரராக உள்ளார். அவருக்கு அடுத்து இந்திய கேப்டன் விராத் கோலி உள்ளார். அவர் 27 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

வரும் போட்டியில் ராகுல் 121 ரன்களை அடித்தால், வெறும் 25 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டிய உலகின் அதிகவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை ராகுல் எட்டிப் பிடிப்பார். பொதுவாக டி-20 போட்டிகளில் சதமடிப்பது கடினம். ராகுல், சர்வதேச டி-20 போட்டிகளில் இதுவரை 2 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.