download (1)
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்டகாலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று அந்த செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.