ராகுல் காந்தி 4-ந் தேதி அமேதி பயணம்: வளர்ச்சி பணிகளை பார்வையிடுகிறார்
அமேதி,
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எம்.பி. தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். மேலும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிடுகிறார்.
ராகுல்காந்தி தனது சொந்த சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் அவர், தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிடுகிறார்.
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ராகுல்காந்தி தனது எம்.பி. தொகுதிக்கு அடிக்கடி பயணம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து வருகிறார்.
ஏற்கனவே கடந்த மாதம் (ஜூன்) 14, 15ந்தேதிகளில் அமேதி செல்வதாக இருந்த ராகுலின் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அமேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த 4 மாதங்களில் ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு செல்வது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.