பைசாபாத்:
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உ.பி. மாநிலத்தில் கிஸான்  யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பாதுகாப்பு வளையத்தைமீறி நுழைய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உ.பியில் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகிளும் இப்போதே தேர்தல் களத்தில் கலக்க தொடங்கி விட்டன.
காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு,  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள், மக்களை  சந்திக்கும் 2500 கிலோ மீட்டர் கிஸான்  யாத்திரை நடத்தி வருகிறார்.
rahul
நேற்றைய யாத்திரை  கோண்டா மாவட்டத்தில்  முடித்துவிட்டு, இரவு பைசாபாத் மாவட்ட எல்லையை வந்தடைந்தார். சகாதாத்காஞ்ச் என்ற  பகுதியில் அவர் சென்ற போது  வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ராகுல்காந்தி யாத்திரையில் நுழைய முயன்றார்.
அதை கவனித்த பாதுகாப்பு படை போலீசார் அவரை மடக்கி கைது செய்தனர். அவரை சோதனை செய்ததில் அவரிடம்  துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர், நபாப்காஞ்ச் பகுதியைச் சேர்ந்த மான்சிங் பகதூர் என்பதும், மாணவர் அமைப்பு ஒன்றின் தலைவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ராகுல்காந்தி யாத்திரையில் துப்பாக்கியுடன் வாலிபர் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.