ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியங்கா கைது: ராகுலை கீழே தள்ளி அடாவடி செய்த உ.பி. மாநில காவல்துறையினர்…வீடியோ

நொய்டா:  பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளனர். யமுனா சாலையில் நடந்து சென்ற அவர்களிடம் மாநில போலீசார் மனிதாபிமானமின்றி, ராகுலை சாலையில் தள்ளி, அடாவடி செய்து கைது செய்துள்ளனர். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த மனிஷா என்ற தலித் பெண் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி உயர்ஜாதியினரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்ப்டடதுடன், அவரது நாக்கை கடித்தும், கடுமையாக தாக்கியும் சாலையில் வீசிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மரணம் அடைந்தார். அவரது உடலை காவல்துறையினர் பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நள்ளிரவிலேயே எரித்து தகனம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல்மீது தடியடி நடத்தும் உ.பி. காவல்துறையினர்…

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க இன்று ஹத்ராஜ் சென்றனர். அவர்களை நொய்டா மாநில எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி நடந்தே சென்றனர். அவர்களுடன் ஏராளமான பொதுமக்களும், காங்கிரஸ் கட்சியினரும் சென்றனர்.

ரேட்டர் நொய்டாவில் இருந்து சுமார் 142 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதிக்கு தாங்கள் நடந்தே செல்வோம் என்று ராகுல், பிரியங்கா அறிவித்துவிட்டு,  காங்கிரஸ் தொண்டர்களுடன் இருவரும் நடந்து சென்றுள்ளனர். செல்லும் வழியில், ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாகக் கூறி அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல்காந்தியிடம்  காவல்துறையினர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதுடன், அவரை சாலையில் கீழே தள்ளிவிட்டு, பின்னர் கைது செய்தனர்.

இதுகுறித்து கூறிய ராகுல்,  ‘காவலர்கள் என்னைத் தள்ளுகிறார்கள்.  என் மீது லத்தி சார்ஜ் செய்து கீழே தள்ளுகிறார்கள். எனக்கு ஒன்று தெரியவேண்டும், இந்த நாட்டில் பிரதமர் மோடி மட்டும் சாலையில் சுதந்திரமாக நடக்க வேண்டுமா? சாதாரண மனிதர்கள் நடக்கக்கூடாதா. என்னுடைய வாகனம் நிறுத்தப்பட்டது. அதனால் நான் இறங்கி நடந்து செல்கிறேன். ஆனால், அதற்கும் போலீஸார் அனுமதி மறுக்கின்றனர்” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த சம்பவம் மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

This slideshow requires JavaScript.